Wednesday, May 26, 2010

மறையட்டும் தீவிரவாதம்


செந்நிற முகில்
பொன்னிற கதிர்
தன்னிற கடல்
கண்ணிற படகு
கவிநிற காலை
கடற்கரை ஓரம்

குறுக்கும் நெடுக்கும்
குருவிகளின் கூட்டம்
குறுகாமல் மலரும்
மொட்டுகளின் தரிசனம்
பாசமும் நேசமும்
கலந்த தாய்மை
பாசாங்கில்லாத
உயிர் ஓவியம்

வடியும் அன்பு
படியும் மனது
மடியட்டும் மதம்
மறையட்டும் தீவிரவாதம்
விடியட்டும் உலகு

Saturday, May 22, 2010

MCA Friend Saravanan's Father Demise

மொட்டுக்களாய்
திரிந்த நம்மை
மனம் வீசும்
பூக்களாய்
மாற்றுவது
நம் பெற்றோர்தான்
இன்று நாம்
மகரந்த பூக்களாய்
மாறிவிட்டோம்
நம் முன்னேற்றத்தை
கண்டு மகிழ
தந்தையே
நீ இப்புவியில்
இல்லையே
என எண்ணுகையில்
நெஞ்சம் உடைகிறதே
நிலை சிதறுகிறதே
ஏ கடவுளே
உனக்கு எம்மேல்
என்ன கோபம்
எந்தையை
என் உம்முடன்
எடுத்து
சென்றாய்
பதில் சொல்.

I Love u Dad.

Tuesday, May 18, 2010

மலர்ந்தது நிஜமாய்

இனிமையில்ல புன்னகை
இறுகிய வயிறு
கறையில்ல உள்ளம்
கரை படிந்த மேனி
கலையா வறுமை
களைத்த கண்கள்
படியா கேசம்
படிந்த தேகம்
விடியா கனவு
விடிந்த வானம்
முடியா வேலை
முடிந்தது வாழ்கை
என நினைகையில்
புதிதாய்
பிறந்தது வானம்
உதிரா கனவு
உதிர்ந்தது வேலை
உணர்த்தா தென்றல்
உணர்த்தியது கல்வி
கலையா சீருடை
கலைத்தது வியர்வை
மலரா கனவு
மலர்ந்தது நிஜமாய்
நாங்களும் பள்ளி
செல்கின்றோம்
இனிப்பான புன்னகையால்
இயற்கை வணங்குகின்றோம்.

Monday, May 17, 2010

நெருப்பில் குளிர்காய்ந்து
வானவில்லை கயிறாக்கி
மணலை சக்கரையாகி
இயல்பை பொய்யாக்கும்
காதலை விட
இயல்பை இயல்பாகவே
ரசிக்கும்
நட்பு.

Saturday, May 8, 2010

கருநிற தென்னை கீற்றுக்கள் - தலைமுடி
அந்தி வானம் - நின் நெற்றி
கூந்தலின் குட்டி குழந்தைகள் - புருவங்கள்
எழில் மின்னும் நிலாக்கள் - கண்
பாய்மர கப்பல் காதலர்கள் - நாசி
பிறந்த செம்மேனி கனிகள் - இதழ்கள்
முலாம்பூசா தங்க கிண்ணங்கள் - கன்னங்கள்
இருபுறமும் வளைவழி பள்ளத்தாக்குகள் - செவிகள்
இவ்வாறாய் நின் முகம்

பனிக்கால மேகங்களாய் நின் மனது
வாழைதண்டு குளிர் ஊற்றுக்களாய் நின் உணர்சிகள்
கோடைகால குழாய் தண்ணீராய் உன் தாய்மை
கார்முகில் சிசுவான மலையருவியாய் உன் நேசம்
வியக்கிறேன் தோழா.

Thursday, May 6, 2010

நட்பின் அத்தாட்சி

நினைக்கவில்லை
நெஞ்சம்
நெகுழும் என்று
நினைக்கவில்லை
நட்பின் பொருள்
நீயென்று
நினைக்கவில்லை
நான் உன் நேசத்தின்
பிள்ளையென்று.

மிக்க நன்றி
நண்பனே

என் நட்பின்
அத்தாட்சி
நீ.

நேசத்தை காக்க

மண்ணை காக்க ஓர் மரம்
மனிதனை காக்க ஓர் குணம்
உழைப்பை காக்க ஓர் முயற்சி
உண்மையை காக்க ஓர் சொல்
நீரை காக்க ஓர் துளி
நேசத்தை காக்க ஓர் நட்பு
அதுதான்
நீ.

Wednesday, May 5, 2010

Mohammed Ajmal Amir Kasab

இருநூறு பேரை
கொன்று
முன்னூறுக்கும்
மேற்பட்டோரை
காயப்படுத்தி
கண்ணீரில் குளிக்க
வைத்த
தீவிரவாதி
காசப்க்கு
ஒன்றரை வருடதிரிக்கு
பிறகு மரணம்
எங்கு செல்கிறது
இந்தியா.

Tuesday, May 4, 2010

கண்மயக்கும் காட்சி
விரல் பிடித்து நடக்கும் பிள்ளை
இலைமேல் மழைத்துளிகள்
பாப்கார்ன் வான்மேகங்கள்
பச்சைபாம்புகளாய் மல்லிகைக்கொடி
பனியில் குளித்த ரோஜா
மகிழ்ச்சியோடு பள்ளிசெல்லும் சிரார்கள்
இப்படி பல
கண்வியக்கும் காட்சி
உறவுகளில் இருந்து
உயிர்களாய் மாறும்
நட்பு.

Monday, May 3, 2010

நல்நட்பு

கனியமுதாய் நற்சொல்
நான்மறையாய் நற்கூற்று
துயரம்போக்கும் நற்துணை
இன்பம்சேர்க்கும் நற்கூடல்
இவையும் தாண்டி
இடுக்கண்வருங்கால்
உயிர்தந்து உயிர்காக்கும்
நல்நட்பு.
அறவில்லா கல்வி
அன்பில்லா தாய்போல்
இலக்கில்லா பயணம்
இலையில்லா மரம்போல்
உழைபில்லா ஊதியம்
உயிரில்ல உடல்போல்
எழில்லா ஓவியம்
ஏரில்லா நிலம்போல்
ஒழுக்கமில்லா மனிதன்
ஒளிராத விண்மீன்போல்
நட்பில்லா வாழ்கை
நிலையில்லா நாவுபோல்.

Friday, April 30, 2010

Ganges


தும்பை நிறத்தவள்
தூயவனின் உயிரவள்
கார்மேனியவனின் துணையவள்
வென்மேருவின் பிறப்பவள்
உண்மையின் பொருளவல்
உயிர்களை உய்விப்பவள்
அவள்தான்
தூய கங்கை.

Friday, April 23, 2010

என் மனைவி

நீ..!
அவிழ்க்க முடியாத விடுகதை நீ
*
பிடிவாதத்தின் கொள்கை நீ
*
மறதியின் மறு பெயர் நீ
*
தண்டிக்க மட்டும் தெரிந்த ஆசிரியை நீ
*
கண்டு பிடிக்காத அதிசய நிலா நீ
*
காதல் உலகம் தேடும் பயங்கரவாதி நீ
*
கவிதைகளை வேவு பார்க்கும் விமானம் நீ
*
ஞாபகப்படுத்த மட்டும் தெரிந்த பாடல் நீ
*
கிழித்தெறிந்த கவிதை நீ
*
மாறாத நோய் நீ
*
மறக்க முடியாத சுனாமி நீ
*
என் உயிரின் உச்சரிப்பு நீ

Monday, April 19, 2010

பஞ்சபூதங்கள்

நிலங்களில் பூக்காது
காற்றினில் பறக்காது
நீரில் மூழ்காது
நெருப்பில் எரியாது
வானில் கரையாது
நட்பு
என்னும் ஓர் அற்புத
உறவு.

Saturday, April 17, 2010

மகாகவி பாரதியார்

எட்டையபுரத்தின்
மின்னல் கீற்று
பாரதத்தின்
எழுச்சி ஊற்று
கவிதையின்
கலங்கரை விளக்கு
காலங்களில்
அணையா விளக்கம்
அகத்தில் கிளர்ச்சி
புகழின் மிளிர்ச்சி
எங்கள்
மகாகவி.

வெற்றிகள்

இமைக்கும் பொழுதில்
இலக்கை நிர்ணையம் செய்
கண் அயரும்வரை
முயற்சி செய்
முட்புதர் போல்
பிரச்சனைகளை விலக்கு
உடைந்த கண்ணாடியில்
தெரியும் பிமபம்போல்
தோல்விகளை ஆய்வு செய்
சுவாசம்போல்
எண்ணங்களை சீர் செய்
வெற்றிகள் உன்
தோட்டத்தில் பூக்களாய்
மலரும்.

Thursday, April 15, 2010

சுவாசமாக

எனக்குள் நீ
உறங்காத கதிரவன்
ஓயாத கடிகாரம்
சீர்கெடாத ஒழுக்கம்
கலையாத கனவு
அழியா காவியம்
~~
உன் இதயத்தில்
நேசத்தின் சுவாசமாக
நான்.
விண்மீன்கள் இடையே
மேனிபோல் செம்பட்டுடுத்தி
புன்சிரிப்புபோல் நகையணிந்து
குளிர்நிலவாய் நீ இருக்க
நின்னருகே
தூய கதிரவனே
உன்னவராய் அமர
என் நேசதிற்குள்
காதல் மலர்வதை
கண்டேனடி
எவ்வாறு
வான்மழை கண்ட
வண்ண மயில்போல்
மகிழ்ந்து ஆடுமோ
அதுபோல்
மகிழ்ந்தேனடி தோழி.

நட்பின் சீர்வருசை

நமக்குள் ஓர் பந்தம்
ஓர் இரவில் நம் அறிமுகம்
இருநாட்களில் உண்டான அன்பு
முக்காலமும் உன் நினைவு
நான் மறையிலும் உன் பெயர்
ஐந்து திங்களில் நீயின்றி நானில்லை
அறுவடை கதிர்போல் உன் ஞானம்
ஏழாம் சுவையாய் உன் ஆறுதல்
எட்டிபார்க்கும் நம் காதல்
ஒன்பதுமுறை மட்டுமே நமக்குள் மோதல்
பத்து பொருத்தமாய் நம் நேசம்
இதுவே நம்
நட்பின் சீர்வருசை.

Wednesday, April 14, 2010

எந்நேரமும் நட்பே

இதமான காலை - உன் பாசத்தின் அரவணைப்பு
சுட்டெரிக்கும் பகல் - உன் கோபம்
இனிமையான மாலை - உன் புன்சிரிப்பு
குளிர் இரவு - உன் நேசத்தின் வாசம்

என் நேரமும் உன் நட்பில்
தோயிந்த
நான்.

நட்பின் முழுமை

பாசம் மாறா பெற்றோர்
கலவி தவறா பள்ளி
அன்பு மாறா மனைவி
தடம் புரளா வழக்கை
இருப்பினும்
நேசம் அறியா மனிதனாய்
இருந்தால்
வாழ்க்கையும் முழுமை
பெறாது.

Tuesday, April 13, 2010

வளமான ஆப்பிள்
குளுர்சியான தர்பூசன்னி
நலம்காக்கும் மாதுளை
சுவையான மாங்கனி
~~
மதியுள்ள வெண்டை
உயிர்காக்கும் பாகல்
உறுதியான கிழங்கு
~~
மணமான மல்லிகை
உண்மையான சூரியகாந்தி
அழகான ரோஜா
~~
முழுமையான நல்வாழை
இதுதான்
நம் நட்பின்
அங்காடி தெரு.

Monday, April 12, 2010

தாயை போல்
பாசமானவன் நீ
முதல் பள்ளி போல்
புதுமையானவன் நீ
முதல் கல்லூரி போல்
உற்சாகமானவன் நீ
முதுல் வேலை போல்
வளமானவன் நீ
முதல் இரவு போல்
புத்துணர்ச்சியானவன் நீ
முதல் குழந்தை போல்
மென்மையானவன் நீ
முதல் நட்பை போல்
முழுமையானவன் நீ.

உயிர்மெய்

அன்பிற்கு அன்னை
ஆசானுக்கு தந்தை
இசைக்கு எம்.எஸ்
ஈகைக்கு கர்ணன்
உண்மைக்கு காந்தி
ஊகத்திற்கு கலாம்
எழுச்சிக்கு பாரதி
ஏழைக்கு தெரெசா
ஒற்றுமைக்கு இந்தியா
ஓவியத்திற்கு ரவிவர்மா

இவை இந்தியாவின் உயிரும் மெய்யும்

உயிரானது நம் நட்பு
மெய்யானது நம் நேசம்

இது நம் தோழமையின்
உயிர்மெய்.
தாயிடம் இருந்து பிள்ளை பிறக்கும் என்று அறிவேன்
ஆனால்
உன் நெற்றியில்லிருந்து வானமும்
உன் கூந்தலில்லிருந்து கார்மேகமும்
உன் புருவங்களில்லிருந்து வானவில்லும்
உன் கண்களில்லிருந்து சூரியச்சந்திரனும்
உன் நாசியில்லிருந்து நாதஸ்ஸுரமும்
உன் புன்சிரிப்பில்லிருந்து முத்துகளும்
உன் கன்னங்கள்ளிருந்து கொவ்வைபழமும்
உன் கழுதில்லிருந்து சங்கும்
உன் மெயில்லிருந்து பொன்னும்
உன் பாததில்லிருந்து மலர்களும்
உன் தாய்மையில்லிருந்து
இவ்வுலகம்
உய்விக்கும் என்று
இன்றுதான் அறிந்தேன்
அன்னையே.
பேசும் சித்திரத்தை
ஊமை விழிகளால்
ரசிபதைபோல்
உன் நேச ஊற்றை
பருகாமல்
வியந்துகொண்டிருந்தேன்
நண்பா.

தவறி தரையில்
விழுந்த மீன்போல்
நானும் தத்தளித்து
கொண்டிருந்தேன்
எவ்வாறும் மீனை
நீர்தொட்டியில்லிட்டு
காபாற்றுவர்களோ
அதுபோல்
என் கரம்பற்றி
நட்பு தொட்டிகுள்ளிட்டு
நேச சுவாசத்தை
தந்தவன் நீ
தோழா.
நீ என் நட்பின் இறைவன்.

Friday, April 9, 2010

இரத்த தானம்









முத்து முத்தான இதயத்தால்
சிந்தய
சொட்டு சொட்டான உயிர்
இரத்த தானம்.

உறங்கத்தான் ஆசை


மதியூகம் இல்லா அரசியலிருந்து
விடுபட்டு உறங்கத்தான் ஆசை
மனிதநேயம் இல்லா சமுதாயம்
விட்டு உறங்கத்தான் ஆசை
மாக்கள் போல் மக்களை
விட்டு உறங்கத்தான் ஆசை
மாமிச வெறியர்களை - - - - (Terrorist)
விட்டு உறங்கத்தான் ஆசை
மதம்பிடித்த மத மிருகங்களை
விட்டு உறங்கத்தான் ஆசை
மரணத்தை அகவலிடுவோரை - - - (Revolutionist)
விட்டு உறங்கத்தான் ஆசை
மனசாட்சியை வதைப்பவர்களை
விட்டு உறங்கத்தான் ஆசை
மாற்றம் நிகழ்த்த முனைதொரை
மதியா மண்ணுலகத்தை
விட்டு உறங்கத்தான் ஆசை

Tuesday, April 6, 2010

அவள் என் உயிர்

மேகமில்லா நிலா
அவள் கண்கள்
இடியில்லா மின்னல்
அவள் புன்சிரிப்பு
செடியில்லா மலர்
அவள் ஸ்பரிசம்
நெருப்பில்லா வெப்பம்
அவள் அரவணைப்பு
பஞ்சில்லா மென்மை
அவள் பாதம்
நீரில்லா ஈரப்பதம்
அவள் முத்தம்
இணையில்லா காவியம்
அவள் ஓவியம்
ஈடில்லா கவிதை
அவள்தான்
என் தாய்.

பௌர்னமி நிலவு

அந்தரத்தில் ஆடும்
நூலில்லா
பெரிய காற்றுப்பை
பௌர்னமி நிலவு.

செங்கதிரவன்
வான்மகளுக்கு
அளித்த
முத்து
பௌர்னமி நிலவு.

பகலை வெள்ளை
அடித்தபோது
இரவின் மேல்
சிந்திய
ஒரு மொட்டு
பௌர்னமி நிலவு.

சுட்டெரிக்கும்
பகலுக்கு
குளிர் இரவின்
சமாதான புறா
பௌர்னமி நிலவு.